கௌதம் மேனன், தனது காக்க காக்க திரைப்படத்திலிருந்து அஜித்குமாருக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் கௌதம் மேனன் - அஜித்குமார் இணையாமலேயே போய்விட, வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு “இனி அஜித்துக்காக நான் காத்திருக்க மாட்டேன். எனக்கு சூர்யா இருக்கிறார்” என கூறியிருந்தார். சமீபத்தில் சிங்கம் 2 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த சூர்யாவிடம், அஜித்துக்காக வைத்திருந்த துப்பறியும் ஆனந்த் உட்பட மூன்று கதைகளை கூறினார். அவற்றில் துருவ நட்சத்திரம் கதையை தேர்ந்தெடுத்த சூர்யா, படுஜோராக படபூஜையிலெல்லாம் கலந்துகொண்டதோடு கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடலை மாற்ற ஜிம்முக்கெல்லாம் போனாராம். ஆனால் தற்போது துருவ நட்சத்திரம் கைவிடப்பட்டு, சூர்யா வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டதாக தெரிகிறது. லிங்குசாமியின் மெகாபட்ஜட் திரைப்படத்தில் நடிக்கவே கௌதம் மேனன் திரைப்படத்தை ஒதுக்கிவிட்டார் சூர்யா என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சூர்யா புராஜக்டை டிராப் செய்துவிட்டு கௌதம் மேனன் சிம்பு நடிப்பில் ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்று பேசப்படுகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் சிம்புவை ஒரு சாக்லேட் பாய்-ஆக மாற்றியவர் கௌதம் மேனன். சிம்புவும், கௌதம் மேனனுடன் இணைய எப்பொழுதும் தயாராக இருப்பதோடு, சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருப்பதால் இந்த கூட்டணி உறுதி என்கின்றது கோடம்பாக்கம். மேலும் சிம்புவுக்கு ஜோடியாக துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்கமாட்டேன் என உறுதியாக கூறிவிட்ட த்ரிஷாவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கவிருக்கிறதாம். காக்க காக்க மாதிரி ஒரு திரைப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி ஒரு திரைப்படத்தை கௌதம் மேனன் கொடுக்கிறாரா என பொருத்திருந்து பார்ப்போம்.
|
Labels: Cinema News