நடிகை அஞ்சலி திடீரென மாயமாகி திரையுலகில் அவ்வப்போது பரபரப்பை கிளப்பிவிடுகிறார். முன்பு மாயமான போது சித்தியால் பல தொந்தரவுகளுக்கு ஆளானேன் என ஒரு பெரிய பூகம்பத்துடன் திரும்பி வந்தார்.
சமீப காலமாக திரையுலகில் எங்கும் காணப்படாமல், அஞ்சலி, விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் மதகஜராஜா திரைப்படத்தின் புரமோஷனுக்கும் கூட தலைகாட்டாமல் ஹைதராபாத்திலே இருந்துவந்தார்.
இந்த சமயத்தில் தான் அஞ்சலிக்கும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம், ஆந்திரா, கேரள என பல மாநிலங்களிலும் இந்த செய்தி தீயாய் பரவ, தற்போது ஹைதராபாத்திலிருந்து ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் அஞ்சலி.
அந்த கடிதத்தில் ” அன்புடையீர் வணக்கம்... கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி... சமீபத்தில் நான் சுந்தர்.C இயக்கத்தில் விஷாலுடன் நடித்த மதகஜராஜா படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய newsfromanjali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! வணக்கம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சலி அனுப்பிய கடிதம் ரசிகர்களின் பார்வைக்கு :
No comments:
Post a Comment