|
குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். மெரினாவில் தன் சினிமா பயணத்தைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு இப்பொது மான்கராத்தேவில் ஹன்சிகாவோடு டூயட் பாடி வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கும், நடிகை பிந்து மாதவிக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட, இதனால் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் பிரச்சனை என்றும் பரபரப்பு கிளம்பியது. தன் மனிவியை பிரிய சிவகார்த்திகேயன் விவாகரத்து வரை சென்றுவிடட்தாக செய்திகள் வந்தன. ![]() இதனை பற்றி பேசுவதற்காக சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “அந்த மாதிரி செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. அந்த நடிகை நான் நடித்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்தார். அவ்வளவுதான். இதை வைத்துகொண்டு தவறான வதந்திகளை சிலர் பரப்பி விட்டுவிட்டனர். மேலும் என் மனைவியுடன் எனக்கு எந்தவித சண்டையோ, பிரச்சினையோ கிடையாது. நங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இன்று (27.08.2013) எங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எங்கள் திருமண நாள். இந்த நாளில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதை சந்தோஷமாக கருதுகிறேன். எனவே இது மாதிரி செய்திகள் வந்தால் யாரும் நம்ப வேண்டாம். நான் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன். தற்போது சிவகார்த்திகேயன் சென்னையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும், இன்று அவர்களின் மூன்றாம் வருட திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
Labels: Cinema News









