சிங்கம் 2 உலகம் முழுவதும் 2400 திரைகளில்


இதுவரை இல்லாதளவுக்கு சூர்யாவின் சிங்கம் 2 எராளமான திரையரங்குகளில் திரையிடப்படவிருக்கிறது, எதிர்வரும் யூலை 5ம் திகதி உலகம் முழுவதும் 2400 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் 2400 திரையரங்குகளே இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுவதால் இதில் சிறிய ஏமாற்றும் இருக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக ரஜினி, விஜய் படங்களுக்கு இருந்த வர்த்தக சந்தையை இப்போது சூர்யாவின் திரைப்படமும் எட்டித்தொட்டுள்ளது.

வெள்ளி திரைக்கு வந்தால் ஞாயிறுவரை மூன்று தினங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக அனைத்து இடங்களிலும் காண்பிக்கப்பட்டாலே இந்தப் படத்தின் விட்ட பணத்தை உழைத்துவிட முடியும்.

மூன்று வார விடுமுறைகள் சிங்கம் 2 ன் வசூல் உச்சத்திலேயே இருக்கும், அது படத்தை பொருளாதார ரீதியாக வெற்றி பெற வைக்கும்.

சிங்கம் ரெய்லர் வன்முறையாக இருந்தாலும் நல்ல முறையில் சரியான வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டியதாகும்.

சூர்யா, விவேக், சந்தானம், மன்சுர்அலிகான், அனுஷ்கா, ஹன்சிகா, மனோரமா, நாசர், விஜயகுமார் என்று பொருந்தொகை நடிகர் கூட்டத்தின் முகங்களை ரெய்லரில் இணைத்து நட்சத்திரப் பட்டாளம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார் டைரக்டர்.
பொதுவாக ஹரியின் படத்தில் உள்ளதைப் போல அரிவாள் காட்சிகள் உள்ளன, ஏற்கெனவே இதுபோன்ற வேலை செய்து விஜய்யின் படமொன்றையும் போட்டுடைத்த பெருமை இயக்குநர் ஹரிக்கு இருக்கிறது.

சிங்கம் 2 சரியான கதையைக் கோட்டைவிட்டு மசாலாவாக இருக்கப் போகிறது என்றாலும், அந்தப்படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் அது சூர்யாவின் அடுத்த படத்திற்கான சம்பளத்தை 16 கோடிக்கு உயர்த்த வாய்ப்புள்ளது.

இதோ புதிய ட்ரெய்லர்:

Labels:



Leave A Comment:

Powered by Blogger.