ஹீரோ அலப்பறைகள் இல்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான அருந்ததி திரைப்படம் அனுஷ்காவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எனவே தமிழ் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைகள் அனுஷ்காவிடமே வந்து சேர்ந்தன. அப்படி வந்த பல கதைகளை உதறிவிட்டு ருத்ரமா தேவி கதையை ஒப்புக்கொண்டு நடித்துவருகிறார் அனுஷ்கா. கமெர்ஷியல் படமான சிங்கம் ll-ல் குத்தாட்டம், காதல் என நடித்து கொடுத்துவிட்டு ருத்ரமா, தேவி திரைப்படத்தில் முழு ஆக்ஷனில் இறங்கியிருக்கிறாராம் அனுஷ்கா. சமீபத்தில் நடந்த ருத்ரமாதேவி படப்பிடிப்பில் மக்கள் கூட்டமுள்ள பகுதியில் ஓடும் குதிரையிலிருந்து, மதம் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் யானை மீது அனுஷ்கா தாவுவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். அந்த உறைய வைக்கும் காட்சியில் அனுஷ்கா தைரியமாக நடித்ததைப் பார்த்து படக்குழுவினர் அனைவரும் பாராட்டினார்களாம். அலெக்ஸ்பாண்டியன் படத்துல ஓட்ற டிரெய்ன்ல இருந்து குதிச்ச(!) அனுஷ்காவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா...
|
Labels: Cinema News