|
நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் திரைக்கு வராமல் இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழகத்தில் ரிலீசாகா ததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் சுமார் 200 பேர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவா திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு அளிக்கக் கோரி மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே வந்த வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஆறுமுகம் விஜய் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு, ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி கூறினார். இதன் பின்னர் ரசிகர்கள் கலைந்து சென்றனர். |
Labels: Cinema News








